IBPS PO Notification 2023 : இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன், PO பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் IBPS, இந்தியா முழுக்க இருக்கும் அதனுடைய கிளைகளில் ப்ரோபேஷனரி அதிகாரி பதவிக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடுகிறது. இந்த 2023-24 நிதியாண்டிற்கான IBPS -யின் PO காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்று முதல் ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி குரூப் ஏ - அதிகாரிகள் (ஸ்கேல்-I, II & III) மற்றும் குரூப் பி - அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) ஆட்சேர்ப்பு RRB களுக்கான (CRP RRBs XII) ஆட்சேர்ப்பு தேர்வுகள் வங்கி பணியாளர் தேர்வாணைய நிறுவனத்தால் (IBPS) நடத்தப்படும்.
இந்த தேர்வுகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் இருக்கலாம். குரூப் ஏ- அதிகாரிகள் (ஸ்கேல்-I, II & III) ஆட்சேர்ப்புக்கான நேர்காணல்கள், அதே செயல்பாட்டின் கீழ் NABARD மற்றும் IBPS உதவியுடன் நோடல் பிராந்திய கிராமப்புற வங்கிகளால் ஒருங்கிணைக்கப்படும். நவம்பர், 2023-ல் தற்காலிகமாக உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என IBPS அறிவிப்பு கூறுகிறது.
IBPS கிளார்க் PO பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூலை 01 முதல் ஜூலை 21 அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in இல் விண்ணப்பிக்கலாம். குரூப் ஏ-அதிகாரிகள் மற்றும் குரூப் பி-அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) ஆட்சேர்ப்புக்கான ஆர்ஆர்பிகளுக்கான (CRP RRBs XII) ஆன்லைன் தேர்வுகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் தற்காலிகமாக நடத்தப்படும். குரூப் 'ஏ' அதிகாரிகளுக்கான நேர்காணல்கள் நவம்பரில் நடத்தப்படும்.
இதையும் படிங்க: எஸ்பிஐ பேங்க் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்! இந்த ஆவணங்கள் இருந்தா மட்டும் போதும்!