இனி பொறியியல் போல் முதுகலை படிப்பிற்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்- அமைச்சர் பொன்முடி தீர்மானம்..!!

By Kalai Selvi  |  First Published Jun 1, 2023, 2:49 PM IST

தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கை போல் முதுகலை படிப்புக்கான சேர்க்கையும் நடத்தப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


சென்னையில் நமது தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று (மே.31)  மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், " நமது மாநிலத்தில் எம். ஏ, எம்.எஸ்.சி மற்றும் எம்.காம் போன்ற முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கையானது இனி, பொறியியல் கவுன்சிலிங் போன்று நடத்தப்படும்.
இந்த பொதுவான சேர்க்கையானது 2024-25 ஆண்டில் நடைபெறும். எனவே, மாணவர்கள் அனைவரும் புதிய முறையின் கீழ் அனைத்து பல்கலைக்கழகளுக்கும் மாநில அளவில் ஒரு விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

அதுபோல, அடுத்த ஆண்டு முதல் யுஜிசி தேர்வு முடிவுகள் ஒரே சீரான தன்மையை கொண்டு வர உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Latest Videos

undefined

இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.8000 சம்பள உயர்வு? விரைவில் வெளியாக உள்ள குட்நியூஸ்!

தற்போது, மாநில பல்கலைக்கழகங்கள் வெவ்வேறு தேதிகளில் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுகின்றனர். இதனால் முதுகலை படிப்பில் சேரு மாணவர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, பல்கலைக்கழகங்கள் வெவ்வேறு தேதிகளில் தேர்வுகள் நடத்தினாலும், ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என்று கூறினார்.

click me!