டான்செட் 2023 தேர்வு தேதி தற்போது வெளியாகி உள்ளது.
எம்பிஏ மற்றும் எம்சிஏ சேர்க்கை கவுன்சிலிங் செயல்முறைக்கு பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் TANCET தரவரிசை பட்டியல் தயாரிப்பில் பரிசீலிக்கப்படுவார்கள். எம்சிஏ படிப்பை தொடர விரும்புபவர்கள் விண்ணப்பத்தில் அவர்களது விருப்பத்தை தெரிவித்து, செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கவுன்சிலிங்கிற்கான கட்டணத்தை கட்ட வேண்டும்.
இதைத் தொடர்ந்து தற்காலிக ஒதுக்கீடு அறிவிப்பு செப்டம்பர் 4ஆம் தேதி வெளியிடப்படும். பின்னர் புரொவிஷனல் ஒதுக்கீடு செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எம்பிஏ விண்ணப்பதாரர்களுக்கான டான்செட் 2022 கவுன்சிலிங் பதிவு செப்டம்பர் 6 முதல் 8, 2022 வரை நடைபெறும். தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் செப்டம்பர் 9, 2022 அன்று வெளியிடப்படும்.
மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !
அதைத் தொடர்ந்து செப்டம்பர் 11, 2022 அன்று புரொவிஷனல் ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படும். 2022-23 கல்வியாண்டுக்கான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம். பிளான், எம்.ஆர்க் படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் அதன் துறைகள், கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்களில் சேருவதற்கு இந்தத் தேர்வு பொருந்தும்.
எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம். பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2022 டான்செட் நுழைவுத் தேர்வு நடப்பாண்டில் மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 36,710 பேர் எழுதினர்.
மேலும் செய்திகளுக்கு..அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!
தேர்வு விவரங்கள்
M.E. / M.Tech. / M.Arch. / M.Plan - February 25, 2023 - 2.30 PM To 4.30 PM
M.C.A - February 25, 2023 - 10.00 AM To 12.00 NOON
M.B.A - February 26, 2023 - 10.00 AM To 12.00 NOON
விண்ணப்பப் படிவம் - பதிவுக் கட்டணம்
பொது / ஓபிசி பிரிவினர் ரூ. 800
SC / SCA / ST பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ. 400
மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு