தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 615 சப்-இன்ஸ்பெக்டர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 615 காலிப்பணியிடங்களில், 40 சதவீதம் இடங்கள் வெவ்வேறு பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
காலியாக உள்ள பணியிடங்களில் 20 சதவீதம் (123 இடங்கள்) பணியில் இருக்கும் காவலர்களுக்கும், 10 சதவீதம் (49 இடங்கள்) காவல்துறை வாரிசுகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும், 10 சதவீதம் இடங்கள் (49 இடங்கள்) விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
20 சதவீதம் காவல் துறை ஒதுக்கீட்டின் கீழ் காவலர்களும் தலைமைக் காவலர்களும் விண்ணப்பிக்கலாம். வாரிசுகளுக்கான 10 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற காவல் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல்லில் அனைத்து பாடங்களிலும் செண்டம் எடுத்து தச்சு தொழிலாளியின் மகள் சாதனை
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2023 அன்று குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தியானவராக இருக்கவேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்சமாக 30 வயது வரை இருக்கலாம். பல்வேறு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயம். அதைத் தவிர முதன்மை எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023. விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய். இந்த வேலைவாய்ப்பு பற்றி மூலம் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்யலாம்.