TN 12th Result 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவிகளை ஓவர்டேக் செய்தார்களா மாணவர்கள்?

Published : May 08, 2023, 09:06 AM ISTUpdated : May 08, 2023, 11:02 AM IST
TN 12th Result 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவிகளை ஓவர்டேக் செய்தார்களா மாணவர்கள்?

சுருக்கம்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு, கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை  3,324 மையங்களில் நடந்தது. இத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 7,600 பள்ளிகளை சேர்ந்த  சுமார்  8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 8.17 பேர் எழுதியுள்ளனர். 

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழ்நாட்டில் 12ம் தேர்வு, கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை  3,324 மையங்களில் நடந்தது. இத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 7,600 பள்ளிகளை சேர்ந்த  சுமார்  8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் 8.17 பேர் எழுதியுள்ளனர். இதனையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. இந்த பணி 79 மையங்களில், 60 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க;- HDB Financial Service வங்கியில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 5ம் தேதி வெளியிட, ஏற்கெனவே தேர்வுத் துறை திட்டமிட்டது. ஆனால்,  மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தாமதம் காரணமாக வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர்,  மே 7ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. மே 7ம் தேதி, நீட் தேர்வு நடப்பதால் அதற்கு முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்பதால் இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என  தேர்வுத்துறை அறிவிப்பை வெளியிட்டது. 

இதையும் படிங்க;- எஸ்.பி.ஐ. வங்கியில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? விவரம் உள்ளே!!

இந்நிலையில், 12ம் பொதுத் தேர்வு முடிவுகள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து இன்று காலை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.45 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

 

12ம் பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு 93.76 சதவீததம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.04 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2வது இடம் திருப்பூர் மாவட்டமும், 3வது இடம் பெரம்பலூர் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

UPSC Exam: இ-சம்மன் லெட்டர் என்றால் என்ன? நேர்காணலுக்கு ஏன் முக்கியம்?
Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!