தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இன்று ஆகஸ்ட் 8ம் தேதி வெளியிட்டுள்ள தகவலின்படி சுமார் 3,359 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் சிறை காவலர்கள், தீயணைப்பாளர் பதவிகளுக்கு தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
பத்தாம் வகுப்பு முடித்த ஆண்கள், பெண்கள், திருநங்கையர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் இந்த பதவிக்கான தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கலாம். அதேசமயம் பத்தாவது படிக்காமல், அதற்கு மேல் படிப்பு தகுதி உள்ளவர்கள் இந்த தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வயது வரம்பு
மேற்கூறிய பணிகளில் சேர்வதற்கான தேர்வினை எழுத குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 26 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு வகுப்பு வாரியாக, வயதில் தளர்வும் அழைக்கப்பட இருக்கிறது. பிசி, எம்.பி.சி, பி சி முஸ்லிம்கள் மற்றும் டிஎன்சி உள்ளிட்ட வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு 28 வயது வரையும், எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 31 வயதுவரையும், திருநங்கைகளுக்கு 31 வயது வரையும், ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு 37 வயது வரையும் தளர்வு அளிக்கப்படும்.
இந்தியன் ரயில்வே.. சுமார் 2.5 லட்சம் காலிப்பணியிடங்கள் - அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தேர்வு நடக்கும் முறை
எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, அதன் பிறகு சிறப்பு தேர்வு ஆகிய மூன்று தேர்வுகள் நடத்தப்படும். இதில் முறையே 70, 24 மற்றும் 6 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம்
இந்த தேர்வுக்கான கட்டணம் 250 ரூபாய், இதை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
மேலும் முழுமையான விவரங்களை பெற www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியை நீங்கள் பார்க்கலாம்.
“படித்த படிப்புக்கு வேலை இல்லை” சட்டசபையில் சான்றிதழ்களை வீசி எறிந்த பட்டதாரி இளைஞர்