மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களில் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
குடிமைப்பணி தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல், இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களில் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது.
இந்த உதவி தொகை பெறுவதற்கான தகுதி தேர்வு வரும் செப்டம்பர் 10ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை கல்லூரி முடித்து, குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் https://nmcep.tndge.org/apply_now என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
undefined
இதில் 50 இடங்கள் முதல்முறையாக தேர்வு எழுதுவோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களது வயது 21ல் இருந்து 22க்குள் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்ஜினியரிங் அல்லது மருத்துவம் மற்றும் அது சார்ந்து படித்த மாணவர்களுக்கு வயது தளர்வு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களுக்கான தேர்வு எழுதுவோருக்கான அதிக பட்ச வயது ஆதிதிராவிடார், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் ஆகியோருக்கு 37 வயதும், மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயதும், ஓபிசி, சீர்மரபினருக்கு 35 வயதும், பொதுப்பிரிவினர் 32 வயதுக்கும் மிகாதவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் IAS / IPS / IFS பணிகளில் சேர இலவச பயிற்சி தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!