கவனத்திற்கு !! 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1500.. இலக்கிய திறனறிவு தேர்வு.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி

By Thanalakshmi V  |  First Published Sep 8, 2022, 3:26 PM IST

தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் வகையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவுள்ள தமிழ் இலக்கிய திறனறித் தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதியாகும். 
 


நிகழ் கல்வியாண்டு முதல் பள்ளி மாணவர்களிடம் தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், தமிழ் இலக்கிய திறனறிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த தேர்வில் வெற்றிப் பெறும் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேலும் படிக்க:இன்று 18 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

Latest Videos

அதுமட்டுமின்றி இந்த திறனறிவு தேர்வில் 50 சதவீதம் அரசுப்பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 சதவீதத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் இந்த தேர்வில் ( ( CBSE / ICSE / உட்பட) 11 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும்.

மாநில பாடத்திட்டத்தின் 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களை அடிப்படையாக கொண்டு கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். 

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! மாதந்தோறும் 1,500 ஊக்கத்தொகை.. முழு விவரம்.

மேலும் மானவர்கள் ‘www.dge.tn.gov.in’ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

click me!