மத்திய துணை ராணுவ படையில் காலியாக உள்ள காவலர்கள் பணயிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: Central Reserve Police Force
காலி பணியிடங்கள்:24,369
undefined
பணியின் பெயர்: constable
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.ssc.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள்.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !!
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு வயது 18 - 23க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிசி பயிற்சி இருந்தால் கூடுதல் சிறப்பு.
உடற்தகுதி:
குறைந்தபட்சம் 5 கி.மீ தூரத்தை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
ஆண்கள்: உயரம் - குறைந்த பட்சம் 170 செ.மீ, மார்பளவு - 80 செ.மீ,
பெண்கள்: உயரம் - குறைந்தபட்சம் 157 செ.மீ .
1.6 கிமீ தூரத்தை 8.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக நிலை 3 யின் படி ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்த தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை , புதுச்சேரி, சேலம், திருச்சி, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
மேலும் படிக்க:12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !