தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள Counsellor பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழக அரசு ( அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு)
பணியின் பெயர்: ஆற்றுபடுத்துநர் ( Counsellor)
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://ariyalur.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க:விண்ணப்பித்துவிட்டீர்களா.? ஜிப்மர் மருத்துவமனையில் 433 செவிலியர் அதிகாரி பணியிடங்கள் !!
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இரண்டாவது தளம்,
அரசு பல்துறை வளாகம்,
ஜெயங்கொண்டம் சாலை,
அரியலூர் – 621 704.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது 45 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
பணிக்கு தொடர்புடைய உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொது சுகாதாரம் ஆகிய துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிபந்தனை:
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
அனுபவம்:
தொண்டு நிறுவனம், பள்ளிகள், மருத்துவமனைகள்,குழந்தை இல்லங்களில் ஆகியவற்றில் குழந்தை சார்ந்த Counselling பணியில் 1 ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் மாத சம்பளமாக ரூ.18,536 வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !