புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் காலி பணியிடங்கள்.. 44,000 சம்பளம்.. முழு விவரம்

By Thanalakshmi V  |  First Published Nov 5, 2022, 1:58 PM IST

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் டிச.1 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.  


நிறுவனம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

காலி பணியிடங்கள்: 433

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்: செவிலியர் அதிகாரி (Nursing Officer)

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரபூர்வ இணையதளமான https:://www.jipmer.edu.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் 

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.1500 செலுத்த வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் ரூ.1,200 செலுத்தினால் போதும். மாற்றுதிறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை.. பொறியியல் படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது 18 -35 க்குள் இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

B.SC Nursing அல்லது Diploma முத்திருக்க வேண்டும். நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

 இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.44,900 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

மேலும் படிக்க:கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள்.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !!
 

click me!