சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையம்
காலி பணியிடங்கள்: 60
பணியின் பெயர்: Junior Research Fellowships ( இளநிலை ஆராய்ச்சி உதவியாளர்)
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் நவ.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.igcrect.in/rect/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Assistant Personnel Officer [R] Recruitment Section
Indhira Gandhi Center Atomic Research,
Kancheepuram District,
Kalpakkam - 603 102,
Tamilnadu.
மேலும் படிக்க:கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள்.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !!
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது 18 - 28 க்குள் இருக்க வேண்டும்.இட ஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., படித்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது தகவல் தொழில்நுட்பம் (Tech) பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை ( B.SC., M.SC) முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.21,000 முதல் ரூ. 40,000 வரை வழங்கபடும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதன்படி, டிச.4 ஆம் தேதி எழுத்துத் தேர்வும் டிச.5 ஆம் தேதி நேர்முகத் தேர்வும் நடைபெறவுள்ளது.
மேலும் படிக்க:12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !