UGC - NET 2022 Result: தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.. தெரிந்துக்கொள்ளுவது எப்படி..? விவரங்கள் உள்ளே

By Thanalakshmi V  |  First Published Nov 4, 2022, 12:09 PM IST

UGC NET தேர்வு முடிவுகள் நாளை ( 5.11.2022) ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் யுஜிசி தலைவர் அறிவித்துள்ளார்.  www.nta.ac.in  என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


நெட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு என்டிஏ வால் நடத்தப்படுகிறது. மேலும் இந்த தேர்வு ஆண்டிற்கு இரண்டு கட்டங்களாக நடைபெறும். கல்வி நிறுவனங்களில் நிரந்தர உதவி பேராசிரியராக பணியாற்ற நெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அது போல் Junior Research Fellowship-JRF எனப்படும் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவிதொகை பெறவும் நெட் தேர்வு தகுதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற வேண்டிய தேர்வுகள், இணைத்து ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி நாடு முழுவதும் நெட் தேர்வு நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டது. 

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும் ? வெளியானது முக்கிய அறிவிப்பு

முதல் கட்டத்தேர்வு கடந்த ஜூலை மாதம் 8 முதல் 12 தேதி வரையும் இரண்டாம் கட்டத்தேர்வு செப். 20 முதல் 23 ஆம் தேதி வரையும் நடைபெற்றது. பின்னர் மூன்று மற்றும் நான்காம் கட்ட தேர்வுகள் செப்.29 முதல் அக். 4 ஆம் தேதி வரையிலும் அக். 8 முதல் 14 ஆம் தேதி வரையிலும் நடந்தது. 

இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி தற்காலிக விடைக்குறிப்பு வெளியானது. மேலும் தேர்வர்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது. பின்னர் நவ. 2 ஆம் தேதி இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் யுஜிசி நெட் தேர்வு முடிவுகள்  www.nta.ac.in  என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் நாளை (05.11.2022) வெளியிடப்படும் என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார். முடிவுகள் வெளியானவுடன் தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி மற்றும் விண்ணப்ப பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்

மேலும் படிக்க:மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம் ? சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

click me!