புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு அரசு பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவை விடுதலை நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து அரசு பணியிடங்கள் குறித்த அரங்கத்தையும் திறந்து வைத்து நோட்டீசை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசின் பல்வேறு துறைகளில் தேர்வு செய்யப்பட உள்ள பணியிடங்கள், பணிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி ஆகியவற்றை வெளியிட்டுள்ளது.
வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் 28, எம்.டி.எஸ். 7 பணியிடங்களுக்கு வருகிற டிசம்பர் 12-ந் தேதி முதலும், காவல்துறையில் கான்ஸ்டபிள் 253 பணிக்கு வருகிற 28-ந் தேதி, சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 60 பேருக்கு வருகிற 10-ந் தேதி, டிரைவர் 26 பேர் பணிக்கு வருகிற 21-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க.12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !
தீயணைப்பு துறையில் நிலைய அதிகாரி 5, தீயணைப்பு வீரர் 58, தீயணைப்பு நிலைய டிரைவர் 12 பேர் பணிக்கு வருகிற 7-ந் தேதி முதலும், வேளாண்துறையில் வேளாண் அதிகாரி 23, வேளாண் அதிகாரி (அக்ரி என்ஜினியர்) 5, வேளாண் அதிகாரி(புவியியல்) 5 பணிக்கு வருகிற 21-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
தொழில்துறையில் தொழில்நுட்ப அதிகாரி 19 பணிக்கு வருகிற 16-ந் தேதி முதலும், போக்குவரத்து துறையில் உதவி மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி பொறியாளர் 9, அலமாக்க உதவியாளர் 30 பேர் பணிக்கு வருகிற 12-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் பீல்டு சூபர்வைசர் 27, புள்ளியியல் அதிகாரி 26 பேர் பணிக்கு வருகிற 15-ந் தேதி முதலும்,. நில அளவைத்துறையில் வரைபடவியலாளர் 12, பீல்டு சர்வேயர் 27, பீல்டு உதவியாளர் 31 பணிக்கு வருகிற 12-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
கணக்கு மற்றும் கருவூலத்துறையில் ஸ்டோர் கீப்பர் 55 பணிக்கு வருகிற 30-ந் தேதி முதலும் திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறையில் திட்ட உதவியாளர் 4, ஆய்வு பகுப்பாளர் 5 பணிக்கு வருகிற 23-ந் தேதி முதலும்,. சுகாதாரத்துறையில் தொழில்நுட்ப உதவியாளர் 13 பணிக்கு வருகிற 25-ந் தேதி, பிசியோதெரபி 3 பணிக்கு வருகிற 20-ந் தேதி, சமூக சேவை 21 பணிக்கு வருகிற 21-ந் தேதி விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க..கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ
தொழில்துறையில் தொழில்நுட்ப அதிகாரி 19 பணிக்கு வருகிற 16-ந் தேதி முதலும், போக்குவரத்து துறையில் உதவி மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி பொறியாளர் 9, அலமாக்க உதவியாளர் 30 பேர் பணிக்கு வருகிற 12-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் பீல்டு சூபர்வைசர் 27, புள்ளியியல் அதிகாரி 26 பேர் பணிக்கு வருகிற 15-ந் தேதி முதலும்,. நில அளவைத்துறையில் வரைபடவியலாளர் 12, பீல்டு சர்வேயர் 27, பீல்டு உதவியாளர் 31 பணிக்கு வருகிற 12-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
பார்மசிஸ்ட் 38 பேர் பணிக்கு, ஏ.என்.எம்., மகப்பேறு உதவியாளர் 49 பேர் பணிக்கு, ஈ.சி.ஜி. தொழில்நுட்பம் 6 பேர் பணிக்கு டிசம்பர் 5-ந் தேதி, அறுவை சிகிச்சை அரங்க உதவியாளர் 33 பணிக்கு வருகிற 10-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் எல்.டி.சி. 165 பணியிடங்களுக்கு வருகிற 10-ந் தேதி முதலும், சுற்றுலாத்துறை உதவியாளர் 5 பணியிடத்துக்கு வருகிற 24-ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் இதற்கான அறிவிப்பை அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு புதுவை இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது. பலர் சிறப்பு பயிற்சி பெற தனியார் பயிற்சி மையங்களை நாடி வருகின்றனர். உதவியாளர் பணி நேரடி நியமனத்துக்கு அமைச்சக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க.தமிழ்நாடு NEET PG 2022 கவுன்சிலிங் 2ம் சுற்று ஒதுக்கீடு பட்டியல் வெளியானது.. பதிவிறக்கம் செய்வது எப்படி ?