வேலூரில் வரும் 15 ஆம் தேதி இராணுவ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலூரில் வரும் 15 ஆம் தேதி இராணுவ வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுக்குறித்த ராணுவத்துறை அறிவிப்பில், வேலூர் மாவட்ட விளையாட்டு மையத்தில் (District Sports Complex) வரும் 15 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை அக்னிவீர் (ஆண்) (“Agniveer (Men), அக்னிவீர் (பெண்கள் இராணுவ காவல் துறை ) (Agniveer (Women Military Police)), பாதுகாப்பு படை வீரர் பிரிவு செவிலியர் (Soldier Technical Nursing Assistant), கால்நடை துறையில் உதவி செவிலியர் (Nursing Assistant (Veterinary)), ஜூனியர் கமிசன்ட் அலுவலர் (Junior Commissioned Officer) மற்றும் Religious Teacher உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி... சென்னையில் 2 சுரங்கப்பாதைகள் மூடல்!! காவல் துறை அறிவிப்பு!
பணி விவரம்:
இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு வருபவர்கள் தேவையான அனைத்து கல்வி சான்றிதழ்களையும் உடன் எழுத்து செல்ல வேண்டும். www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கூடுதல் விவரங்களை பெறலாம். தமிழ்நாடு வேலூரில் உள்ள போலீஸ் ஆட்சேர்ப்பு பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் அனுமதியின்றி போராட்டம்.. பாஜக தலைவர் அண்ணாமலை கைது - பரபரப்பு !
தமிழ்நாட்டில் இருந்து கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவ பணிக்கு விண்ணப்பித்தவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாம் செயல்முறை முற்றிலும் தானியங்கி முறையில் நடைபெறுகிறது. நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறும் என்றும் யாரேனும் தேர்ச்சி பெற அல்லது பதிவுசெய்ய உதவ முடியும் என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம். தகுதி அடிப்படையிலேயே பணி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.