மத்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
நிறுவனம்: மத்திய ரிசர்வ வங்கி
காலி பணியிடங்கள்: 5
பணியின் பெயர்: Medical Consultants
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க:தமிழக அரசின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் இதோ.
கல்வித் தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் எம்.பி.பி. எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மருத்துவம் தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்:
விண்ணப்பதார்கள் மருத்துவதுறையில் 2 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
இப்பணிக்கு தேர்வுசெய்யப்படும் தகுதியானவர்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.1000 விதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
இட ஒதுக்கீடு விவரம்:
பொதுபிரிவு - 3
ஒபிசி - 1
எஸ்.சி - 1
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
சென்னையிலுள்ள பணியிடம் குறித்த விவரம்:
பெசண்ட் நகர்
கே.கே.நகர்
கோயம்பேடு
சூளைமேடு
அண்ணா நகர்
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு...ரூ.50,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..