வங்கி பணியாளர் தேர்வாணையமானது (ஐபிபிஎஸ்) பல்வேறு வங்கி கிளையில் காலியாக உள்ள 710 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வாணையம்
காலி பணியிடங்கள்: 710
பணியின் பெயர்: IT Officer, Agriculture field officer, Rajbhasha Adhikari, Law officer, Marketing Officer, HR/Personnel officer, Marketing Officer
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிகும் முறை:
https://www.ibps.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., நிர்ணயிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் ரூ.175 மட்டும் செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது 20 - 30 க்குள் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க:கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள்.. புதுச்சேரி அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு !!
கல்வித் தகுதி:
IT Officer: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், கணினி பயன்பாடுகள், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகிய துறையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டம் முடித்திருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகிய பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Agriculture field officer:
வேளாண்மை, கால்நடை அறிவியல், மீன்வள அறிவியல், மீன் வளர்ப்பு, பால்வள அறிவியல் , தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு ஆகிய பணிக்கு தொடர்புடைய துறையில் 4 ஆண்டுகள் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், வேளாண் பொறியியல், உணவு அறிவியல், வனவியல், வேளாண் வணிக மேலாண்மை, வேளான் உயிரி தொழில்நுட்பம், பட்டு வளர்ப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Rajbhasha Adhikari:
ஹிந்தி, ஆங்கிலம், ஹிந்தி பாடங்களுடன் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Law Officer:
சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்க வேண்டும்.
HR/Personnel Officer:
பணியாளர் மேலாண்மை, தொழில்துறை உறவுகள், சமூகப் பணி, தொழிலாளர் சட்டம் ஆகியவற்றில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் அல்லது இரு ஆண்டுகள் முழு நேர முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Marketing Officer:
Marketing பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது முழு நேர டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது முழு நேர எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL நிறுவனத்தில் வேலையுடன் ஓராண்டு பயிற்சி - அசத்தல் அறிவிப்பு !