10 வது படித்திருந்தாலே போதும் !! நல்ல சம்பளத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..

By Thanalakshmi V  |  First Published Jul 23, 2022, 4:55 PM IST

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 35 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவறை எழுத்தாளர், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர், பெருகுபவர், காவலர் போன்ற பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 


ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 35 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவறை எழுத்தாளர், தோட்டக்காரர், துப்புரவு பணியாளர், பெருகுபவர், காவலர் போன்ற பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 25 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்..மாஸ் காட்டிய டிவிஎஸ்..

Tap to resize

Latest Videos

மேலும் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் பணிகளுக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு செய்வதில் Lower அல்லது Higher சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தோட்டக்காரர், துப்புரவு பணியாளர், பெருகுபவர், காவலர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சமாக 37 ஆக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  அதுமட்டுமல்லாமல், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, அவர்களின் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட்.. பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு.. எப்பொது வரை விண்ணப்பிக்கலாம்..?

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் மேற்கண்ட பணிகளுக்கு  விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!