10ம் வகுப்பு படித்தால் போதும்..ரயில்வே துறையில் அட்டகாசமான வேலைவாய்ப்பு இதோ !

Published : Jul 22, 2022, 07:59 PM IST
10ம் வகுப்பு படித்தால் போதும்..ரயில்வே துறையில் அட்டகாசமான வேலைவாய்ப்பு இதோ !

சுருக்கம்

ரயில்வே துறையில் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கான அருமையான வாய்ப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

சேலம் மாவட்ட தெற்கு ரயில்வே துறை தற்போது சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பில் Wireman, Computer Operator And Programming Assistant ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வரவேற்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்ட தெற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள Wireman, Computer Operator And Programming Assistant ஆகிய பணிகளுக்கு தலா 02 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Wireman பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.
மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

மேலும் Computer Operator And Programming Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதார்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. Wireman பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.5,000/- முதல் ரூ.7,000/- வரை மாத உதவித்தொகையாக பெறுவார்கள். 

Computer Operator And Programming Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை மாத உதவித் தொகையாக பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் (https://www.apprenticeshipindia.gov.in) பதிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now