மிஸ் பண்ணிடாதீங்க ! மாதம் ரூ.20,000 சம்பளம்..தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு !

By Raghupati R  |  First Published Jul 22, 2022, 6:01 PM IST

தமிழக அரசில் 33 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS Cuddalore) காலியாக உள்ள Pharmacist, Data Entry Operator, Driver போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள பணிகளுக்கு என மொத்தமாக 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (30.07.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

undefined

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ. 88,600 சம்பளம் - தேர்வு இல்லை.. நேர்காணல் மட்டுமே..உடனே விண்ணப்பிக்கலாம் !

Pharmacist பணிக்கு D.Pharm Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Dental Assistant, Driver பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Physiotherapist பணிக்கு Physiotherapy பாடப்பிரிவில் Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Urban Health Nurse பணிக்கு Nurse பாடப்பிரிவில் சான்றிதழ்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Multipurpose Hospital Worker பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Optometrist பணிக்கு Optometrist / Ophthalmic Assistant பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Refrigeration Mechanic பணிக்கு Refrigeration Mechanic and Air Conditioning பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் செய்திகளுக்கு..12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!

Data Entry Operator பணிக்கு Computer Applications பாடப்பிரிவில் Bachelor’s Degree மற்றும் Diploma முடித்தவர்கள் மற்றும் Typewriting பிரிவில் Lower சான்றிதழ்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து dphcud@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

30.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.8,500/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகளுக்கு..டிகிரி மட்டும் போதும்.. வங்கி வேலைக்கு உடனே விண்ணப்பிங்க !

click me!