
காலி பணியிடங்கள்:
மேலும் விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரம் அடங்கிய சுய விவர படிவத்தை ஆன்லைனில் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும். தற்போது தென் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Relationship Manager - Financial Institution Group, Dealer - Derivatives, Relationship Manager – CSGL & DCM ஆகிய பதவிகள் நிரப்படவுள்ளன.
தேர்வு செய்யும் முறை:
இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. பெறப்பட்ட விண்ணப்பங்களை தகுதிவாய்ந்த விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர், நேர்காணல் முறையில் மேற்குறிப்பிட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:சூப்பர் அறிவிப்பு !! விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் இரு மடங்கு உயர்வு .. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை Relationship Manager - Financial Institution Group மற்றும் Dealer - Derivatives ஆகிய பதவிகளுக்கு 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதே போல் Relationship Manager – CSGL & DCM பதவிக்கு 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Relationship Manager - Financial Institution Group : அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை அல்லது CA படிப்பினை 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Dealer - Derivatives : அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருந்தாலே போது. குறைந்தபட்ச 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Relationship Manager : அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA அல்லது அதற்கு இணையான படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:சூப்பர் அறிவிப்பு.. ஜிப்மர் மருத்துவமனையில் மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி..?
பிற தகவல்கள்:
Relationship Manager Financial Institution Group மற்றும் Dealer - Derivatives பதவிக்கு 4 வருடம் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். Relationship Manager - CSGL & DCM பதவிக்கு 2 வருடம் அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
Scale I / II / III (IBA Package) என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் வழங்கப்படும்
பணியிடம் :
மும்பையில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்கள் பணியில் அமர்த்தப்படுவர்.
மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட்!! தவறவிடாதீர்கள்.. குரூப் 1 மற்றும் 2 தேர்விற்கு இலவச பயிற்சி முகாம்.. முழு விவரம்
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.southindianbank.com/ சென்று விண்ணப்பித்தனை பதிவிறக்கம் செய்ய வேண்டும் . விண்ணப்ப படிவத்தை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத் தாரர்கள் புகைப்படம் , சுய விவரப் படிவம் (Curriculum Vitae (CV)) ஆகியவற்றை இணைக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.