தேர்வர்களே அலர்ட்!! தவறவிடாதீர்கள்.. குரூப் 1 மற்றும் 2 தேர்விற்கு இலவச பயிற்சி முகாம்.. முழு விவரம்

By Thanalakshmi VFirst Published Aug 6, 2022, 11:41 AM IST
Highlights

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை மற்றும் குரூப் 2 முதன்மைத் தேர்வுகளுக்குக் கட்டணமின்றி  இலவசப் பயிற்சி வகுப்புகள் குறித்து டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 

அரசுப் பணியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் 30ஆம் தேதி  நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இணையதளங்களின் வழியாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை மற்றும் குரூப் 2 முதன்மைத் தேர்வுகளுக்குக் கட்டணமின்றி  இலவசப் பயிற்சி வகுப்புகள் குறித்து டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து இந்த இலவச பயிற்சி முகாமை நடத்தி வருகின்றன. 
தற்போது குரூப் 1 அல்லது குரூப் 2 தேர்விற்குப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ள மாணவர்களுக்கு தாங்கள் வழங்கும் பயிற்சி வழிகாட்டுதலாக அமையலாம் என்று தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க:மாணவர்கள் கவனத்திற்கு !! அரசு கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை ?

மேலும் இந்த பயிற்சி முகாமில் குரூப் 1 மற்றும் 2-க்கான மாதிரித் தேர்வு வார இறுதி நாட்களில் நடைபெறும் என்றும் பாடத்திட்டங்களின் அளவிற்கேற்ப   எழுத்துத் தேர்வின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்த ஆதாரத்தின் நகலுடன், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் கொண்டு வர வேண்டும். 

முறையாக விண்ணப்பித்தவர்கள் மட்டுமே வகுப்பில் சேர தங்களைப் பதிவு செய்துகொள்ள இயலும். பதிவு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்றவர்கள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு பதிவுக் கட்டணத்தில் அவர்களின் சூழலுக்குத் தகுந்தாற்போல் பகுதியாகவோ, முழுமையாகவோ விலக்கு அளிக்கப்படும் என்றும் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே வகுப்பில் பங்கேற்க இயலும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தேர்வுகளே அலர்ட்!! குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ வெளியீடு.. ஆட்சபனைகளை தெரிவிப்பது எப்படி..? முழு விவரம்..

குரூப் 1 தேர்வில் பங்குபெறும் மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், தொழில்நுட்ப ரீதியாகவும் மாணவர்களுடைய திறமையை வெளிக்கொணரும் வகையிலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக வகுப்புகள், மாதிரித் தேர்வும் அதையொட்டிய கலந்துரையாடல் வடிவத்திலேயே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தேர்விற்காகப் படித்து, வழிகாட்டுதல் தேவைப்படும் மாணவர்கள் மட்டும் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 வரை  வகுப்புகள் வாரந்தோறும் நடைபெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.  தேர்வில் வெற்றி  பெற்ற முன்னாள் மாணவர்கள் மற்றும்  திறமையான ஆசிரியர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படவுள்ளன.அதுமட்டுமின்றி அரசுத் துறைகளில் பல்வேறு நிலையில் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வுள்ளனர் என்று அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளது. இங்கு பயின்ற 1200-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுத் துறைகளின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:குரூப் 1 தேர்வில் மாஸ் காட்டிய பெண்கள்... 66 இடங்களில் 57 இடங்களில் பெண்களே வெற்றி!!

click me!