தீயாக வேலை தேடுவோர் மற்றும் வேறு வேலையில் சேர வேகமாக ரெஸ்யும் தயாரிப்போர், அவசியம் கவனிக்க வேண்டிய விவரங்களை பார்ப்போம்.
வேலை தேடுவோர் ரெஸ்யும் தயாரித்தலில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல ரெஸ்யுமை தயாரித்து விட்டாலே, வேலை தேடுவதில் பாதி சுமை காணமல் போகிடும். பழையற்ற ரெஸ்யும், எப்படியேனும், உங்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்து விடும். வேலை வழங்குவோர் ரெஸ்யும் தரத்தை பார்த்தே, ஒருவரை பணியில் அமர்த்துவதற்கு மற்ற விஷயங்களை கவனிக்க முற்படுவர்.
மேலும் படிக்க: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்களா? ஐஓசிஎல்-இல் அசத்தல் வேலை - முழு விவரங்கள்..!
அந்த வகையில், ரெஸ்யும் தயாரித்தலில் நீங்கள் பின்பற்ற வேண்டிய அல்லது கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக பார்ப்போம். கீழே கொடுக்கப்பட்டு உள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி, ரெஸ்யும் தயாரித்து உடனே வேலையில் சேர்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தலாம்.
மேலும் படிக்க: உளவுத்துறையில் அதிகாரியாகனுமா? 786 பணிகளுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்...!
1 - எல்லாவற்றையும் குறிப்பிட வேண்டுமா?
உங்களது ரெஸ்யுமில் நீங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரங்களை அதிகளவில் பட்டியலிட வேண்டிய அவசியம் இல்லை. ரெஸ்யுமில் உங்களின் கடந்த கால வேலை விவரங்களை பட்டியல் இடுவதோடு, குறிப்பிட்ட வேலையை செய்ய உங்களிடம் இருக்கும் தகுதி மற்றும் திறமைகளை பட்டியலிடலாம். இது அந்த வேலையை உங்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தை வேலை வழங்குவோருக்கு கொடுக்கும்.
மேலும் படிக்க: இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... விண்ணப்பிப்பது எப்படி?
2 - மாஸ்டர் ரெஸ்யும்:
பல்வேறு வேலைகளில், பல்வேறு பணிகளில் ஈடுபட்டவர்கள் அது பற்றிய விவரங்கள் அடங்கிய ரெஸ்யும்களின் கோப்புகளை கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது, குறிப்பிட்ட பணியில் சேரும் போது, அதுபற்றிய விவரங்களை பழைய ரெஸ்யுமில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்து கொள்ளலாம். சமயங்களில் அனைத்து பணி விவரங்களும் எல்லா ரெஸ்யும்களிலும் சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. அந்த சமயங்களில் சில விவரங்களை நீக்கி விடுவது நல்லது.
3 - மிக முக்கிய விவரங்கள்:
விளம்பர யுக்தியில் மிக முக்கிய விஷயம் முகப்பு பகுதியில் நீங்கள் மிக முக்கியமாக குறிப்பிட விரும்பும் தகவல்களை இடம்பெற செய்ய வேண்டும். ரெஸ்யுமின் முதல் பாதியில் வேலையை வழங்குவோர் முதலில் பார்ப்பர் - அந்த வகையில், இதுவே முதல் கவனத்தை ஈர்க்கும். இந்த பகுதியில் நீங்கள் பதிவிடும் விவரங்களே உங்களை வேலையில் சேர்க்க அடித்தளமாக இருக்கும்.
4 - குறிக்கோள் பகுதி:
ஒரு துறையில் பணியாற்றி விட்டு, அதில் இருந்து மற்றொரு துறையில் பணிக்கு சேரும் போது தான் ரெஸ்யுமில் Objective பகுதியை இடம்பெற செய்யலாம். இங்கு நீங்கள் ஏன் இந்த துறையில் பணியாற்ற வருகின்றீர்கள் என்பதை விளக்கலாம். ஒரே துறையில், நிறுவனம் மட்டும் மாறும் பட்சத்தில் இந்த பகுதியை தவிர்ப்பது நல்லது.
5 - ஆர்டர் மாற்றலாம்:
ரெஸ்யுமில் இடம்பெறும் விவரங்களை உங்கள் விருப்பம் மற்றும் குறிக்கோள் அடிப்படையில் மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் முதலில் குறிப்பிட விரும்பும் மிக முக்கிய விவரங்களை முதலில் வைத்துக் கொள்ளலாம். இந்த வகையில் உங்களின் முன் அனுபவம் மற்றும் திறமைகளை முதலில் பட்டியலிடுவது சிறந்த பலன்களை அளிக்கும்.