எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 1422 சிபிஒ (CBO) பணியிடங்களுக்கு விண்ணப்பக்க இன்று தான் கடைசி நாள். விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
நிறுவனம்: எஸ்பிஐ
காலி பணியிடங்கள் : 1422
பணியின் பெயர்: Circle based officer (CBO)
பணியிடம்: மேற்கு வங்கம், சிக்கிம்,ராஜஸ்தான், சத்தீஸ்கர்,ஒடிசா, மத்திய பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், கோவா, மாகராஷ்டிரா, மேகலாயா, மிசோரம்,நாகலாந்து, திரிபுரா, மணிப்பூர், தெலுங்கானா ஆகிய இடங்களில் காலி பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் வரும் நவ.7 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://sbi.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுதிறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம் ? சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
கல்வித் தகுதி:
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியாளர், பட்டய கணக்காளர், மருத்துவம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது 21- 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.36,000 முதல் ரூ.63,840 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழித்தேர்வு, ஸ்கிரீனிங், நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!