இந்திய ராணுவத்தில் ரூ.81,100 சம்பளத்தில் சூப்பர் வேலை.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

By Thanalakshmi V  |  First Published Oct 28, 2022, 5:16 PM IST

இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Constable, Head Constable பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
 


நிறுவனம்: இந்திய ராணுவம்

காலி பணியிடங்கள் : 186

Tap to resize

Latest Videos

Constable - 158

Head Constable - 28 

பணியின் பெயர்: Head Constable, constable

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் நாளை முதல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: 

www.recruitment.itbpolice.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க:இந்திய ராணுவத்தில் Head Constable பணியிடங்கள்.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணப்பிக்கலாம்..?

கல்வித் தகுதி: 

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது மோட்டார் மெக்கானிக் பிரிவில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவ சான்றிதழ் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களுக்கு வயது 18 - 25 க்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

நிலை 4யின் படி தலைமை காவலர் பதவிக்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். நிலை 3யின் படி காவலர் பதவிக்கு மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

இப்பணிக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

click me!