டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், விரைவில் தேர்வு முடிவுகள் வெளிவரும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 2 தேர்வு:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் குரூப் 2 தேர்வும், ஜூலை மாதம் குரூப் 4 தேர்வுகளையும் நடத்தியது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியாக இருந்தது. ஆனால் இதுவரை வெளியாகவில்லை.
undefined
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு:
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை ஒன்றினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், ‘ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது.
இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. மேற்படி வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க..கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ
விரைவில் தேர்வு முடிவுகள்:
இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் மேற்படி தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நம்ப வேண்டாம்:
இது தொடர்பாக செய்தி, சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தினை (https://www.tnpsc.gov.in/) மட்டுமே அணுகுமாறும் தெரிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!!