தெற்கு ரயில்வேயில் 1,284 காலி பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் உள்ளே

By Thanalakshmi V  |  First Published Oct 26, 2022, 3:39 PM IST

தெற்கு ரயில்வே மாதம் உதவிதொகையுடன் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு காலியாக உள்ள 1,284 பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 


நிறுவனம்: தெற்கு ரயில்வே

காலி பணியிடங்கள் : 1,284 

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்: Trade Apprentice 

பணியிடம்: போத்தனூர், பாலக்காடு, சேலம், திருவனந்தபுரம் ஆகிய ரயில்வே பணிமனைகளில் காலி பணியிடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: 

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:ரூ.1,40,000 சம்பளத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு.. முழு விவரம்

வயது வரம்பு: 

10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் - 15 - 22 வயது 

ஐடிஐ முடித்தவர்கள் - 15 - 24 வயது

கல்வித்தகுதி: 

10 ஆம் வகுப்பில் 50 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

உதவிதொகை விவரம்: 

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6000 வழங்கப்படும். ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் 10 மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மேலும் படிக்க:மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!
 

click me!