மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 540 உதவி சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி துணைக் காவல் ஆய்வாளர்( Assistant – Sub Inspector) காவல்துறையின் தலைமை காவலர் (Head Constable – Ministerial) பணியிடங்கள் காலியாக உள்ளதென அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- உதவி துணைக் காவல் ஆய்வாளர்(Assistant – Sub Inspector)
- காவல்துறையின் தலைமை காவலர் (Head Constable – Ministerial)
கல்வித் தகுதி:
- அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- துணைக் காவல் ஆய்வாளர்( Assistant – Sub Inspector) : 5 லெவல் ஊதிய வரைவின் படி ரூ. 29,200 முதல் ரூ.92,300 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
- தலைமை காவலர் பதவிக்கு (Head Constable – Ministerial) ஊதிய வரை 4வது வரைவின் படி, ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
- இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- அதன்பின், திறனறிவுத் தேர்வு நடத்தபடும்.
- மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.
- எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.cisfrectt.in என்ற லிங்கை கிளிக் செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- இந்தப் பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: