வன மரபியல் நிறுவனத்தில் வேலை!! 10ம் வகுப்பு படித்தாலே போதும் - எவ்வாறு விண்ணப்பிப்பது ? முழு விபரம்

By Raghupati RFirst Published Oct 25, 2022, 4:07 PM IST
Highlights

மத்திய அரசில் இருந்து வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

நேரடி நியமனம் அடிப்படையில் இந்த காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..கொட்டிக்கிடக்கும் அரசு வேலை.. 8ம் வகுப்பு படித்தாலே போதும்.. முழு தகவல்கள் இதோ

நிறுவனத்தின் பெயர் : வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம்

காலி பணியிடங்கள் : 10

பணியிடம் : கோவை

கடைசி தேதி : 25.11.2022

பன்முக உதவியாளர் - 5

உதவியாளர் - 3

தொழில்நுட்ப உதவியாளர் - 2

கல்வித்தகுதி :

பன்முக உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உதவியாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.19,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு B.Sc Botany or B.Sc Agri படித்திருக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.29,200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிங்க..ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ!!

விண்ணப்பக் கட்டணம்:

பன்முக உதவியாளர் (Multi-Tasking Staff) : ரூ. 500 SC/ST மற்றும் பெண்களுக்கு ரூ. 250

உதவியாளர் (Lower Division Clerk) : ரூ. 1000 SC/ST மற்றும் பெண்களுக்கு ரூ. 500

தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) : ரூ. 1,500 SC/ST மற்றும் பெண்களுக்கு ரூ. 750 என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி ? :

விண்ணப்பிக்க https://ifgtb.icfre.org/advertisements.php என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..மாதம் 30 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை.. யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம் ? முழு விபரம் இதோ

click me!