அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
புதிதாக துவங்கப்பட்டுள்ள அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..போட்டித்தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.! குடிமைப் பணிகளுக்கு இலவச பயிற்சி - எவ்வாறு விண்ணப்பிப்பது ?
நிறுவனத்தின் பெயர் : அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை
மொத்தகாலியிடங்கள் : 34
இடம் : அரியலூர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம்
விண்ணப்பக் கட்டணம் : இல்லை
தேர்வுமுறை : நேர்முகத் தேர்வு
பதவியின்பெயர்:
1.ஓட்டுனர்
2.வார்டு உதவியாளர்
3.மருத்துவமனை பணியாளர்
4.துப்புரவு பணியாளர்
5.வண்டி தள்ளுநர்
கல்வித்தகுதி
எட்டாம் வகுப்பு படித்து இருந்தால் போதும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். அதிகாரபூர்வ அறிவிப்பில் மேலும் அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க..எஸ்.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கு ஹேப்பி நியூஸ்.! வெளியானது சூப்பர் அறிவிப்பு