ரேஷன் கடையில் பணியாற்றுவதற்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரேஷன் கடையில் பணியாற்றுவதற்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து விழுப்புரம் மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் உத்தேசமாக காலியாக உள்ள 244 விற்பனையாளர் (ரேஷன் கடை உள்ளிட்ட) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதையும் படிங்க: வீடுவீடா ஓட்டு கேட்கும்போது ஆக்கிரமிப்பு நிலமென்று தெரியலயா.?? ஸ்டாலின் அரசை கழுவி கழுவி ஊற்றும் சீமான்.
undefined
விண்ணப்பங்கள் https://www.drbvpm.in என்ற இணையதளம் வழியாக நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5:45 மணி வரை வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க ஏதுவாக கூட்டுறவு துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கான வழிகாட்டு முறைகளை www.youtube.comல் உள்ள டி.என்., கோ ஆப் துறை சேனலில்(youtube Channcl - TNCOOP DEPT) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உணவு பதப்படுத்துதல் தொழில் தொடங்க மானியத்துடன் கடன்.. தகுதிகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளிலும் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 244 விற்பனையாளர் பணியிடங்கள் குறித்தும், வேலைக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.