தேர்வர்களே அலர்ட் !! ”CA இறுதி தேர்வுக்கான Final Admit card 2022” வெளியானது.. பதிவிறக்கம் செய்வது எப்படி..?

Published : Oct 18, 2022, 04:34 PM IST
தேர்வர்களே அலர்ட் !! ”CA இறுதி தேர்வுக்கான Final Admit card 2022” வெளியானது.. பதிவிறக்கம் செய்வது எப்படி..?

சுருக்கம்

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சிஏ தேர்வுக்கான இறுதி அனுமதி சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.  

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சிஏ தேர்வுக்கான இறுதி அனுமதி சீட்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.மாணவர்கள்  icaiexam.icai.org என்ற இணையதளத்திற்கு சென்று (CA Final Admit card 2022 ) தங்களது பதிவு எண்ணை உள்ளீடு இறுதி அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் ICAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு தேதி மற்றும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புகளும் உள்ளன. அதன் மூலம் அதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட் !! இனி 2ஆம் ஆண்டு செமஸ்டரில் தமிழ் கட்டாயம்.. எந்தெந்த பிரிவுகளுக்கு தெரியுமா..?

இந்த தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த அக்.8 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்த மாதம் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் தாமத்திற்கான கட்டணம் செலுத்தி நவ.7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். eservices.icai.org  என்ற இணைப்பை பயன்படுத்தி CA தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக ICAI (Institute of Chartered Accountants of India) CA இறுதிப் பாடத் தேர்வு 2022 நவம்பர் 1, 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் குரூப் 1-க்கும், நவம்பர் 10, 12, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் குரூப் 2-க்கும் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. 

மேலும் படிக்க:குட்நியூஸ்.. தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

PREV
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now