எஸ்பிஐயில் CBO Officer பதவிகளில் காலியாக உள்ள 1,400 பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: எஸ்பிஐ
காலி பணியிடங்கள்: 1,400
பணியின் பெயர்: CBO Officer
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் இன்று முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
sbi.co.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் நிர்ணயிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட் !! ”CA இறுதி தேர்வுக்கான Final Admit card 2022” வெளியானது.. பதிவிறக்கம் செய்வது எப்படி..?
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது 21 - 30 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
மத்திய அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை ஒருங்கிணைந்து முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.36,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழித் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களை காண புதிய வசதி... முழு விவரம் உள்ளே!!