
பணி விவரம்
இரவு நேர காவலர் - 1 பணியிடங்கள்
ஈப்பு ஓட்டுநர் - 4 பணியிடங்கள்
அலுவலக உதவியாளர் - 4 பணியிடங்கள் மொத்தம் 9 பணியாளர்கள் தேவைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
அதிகாரப்பூர்வ தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 13.11.2023 முதல் 21.11.2023 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்படிவங்கள் அனுப்பும் முறை
விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து அதை அனுப்பி வைக்கவேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கால் லெட்டர் அனுப்பப்பட்டு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். தாமதமாக மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் கடிதங்கள் நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
சம்பள விவரம்
இரவு நேர காவலர் - 15,700 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை
ஈப்பு ஓட்டுநர் - 19,500 முதல் 60,000 வரை
அலுவலக உதவியாளர் - 15,700 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை
கல்வித்தகுதி
இரவு நேர காவலர் - எழுத படிக்கச் தெரிந்திருந்தால் போதும்.
ஈப்பு ஓட்டுநர் - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அலுவலக உதவியாளர் - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.