10ஆம் வகுப்பு படித்திருந்தாலே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் விண்ணப்பிக்க குறைவான அவகாசமே உள்ளது. வரும் நவம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னையில் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
10ஆம் வகுப்பு படித்திருந்தாலே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் விண்ணப்பிக்க குறைவான அவகாசமே உள்ளது. வரும் நவம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணிக்கு 2 காலியிடங்கள் மட்டுமே உள்ளன. இது. தற்காலிகமாகப் பணி என்பதால் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியம் வழங்கப்படும். ரூ.12,000 மாத சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த வேலைக்கு முயற்சி செய்பவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வேகமாக டைப்பிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். தட்டச்சுப் படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். கம்ப்யூட்டரை சிறப்பாக பயன்படுத்தத் தெரிந்திருப்பதும் முக்கியம்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவராகவும் இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்புக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (MBC / DC) சார்ந்தவர்கள் தான் விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பித்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படாது.
இந்தப் பணிக்கான விண்ணப்பப் படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம். அல்லது https://chennai.nic.in/ என்ற சென்னை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்றும் பதிவிற்றக்கம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களுடன் 10.11.2023 அன்று பிற்பகல் அலுவலக நேரத்திற்கு முன்பு கீழே உள்ள அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மாவட்ட சமூகநலஅலுவலகம், சென்னை,
மாவட்டஆட்சியர்அலுவலகம் 8-வதுதளம்,
சிங்காரவேலன் மாளிகை,
இராஜாஜிசாலை, சென்னை-01