10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 108 ஆம்புலன்ஸில் வேலை.. வரும் 4-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்..

By Ramya s  |  First Published Nov 2, 2023, 10:40 AM IST

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.


108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் தாய் சேய் நல வாகன ஓட்டுநர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மருத்துவ உதவியாளருக்கான தகுதி:

Tap to resize

Latest Videos

பிஎஸ்சி நர்சிங், அல்லது ஜி என் எம், அல்லது DMLT (12-ம் வகுப்புக்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். அல்லது Bio Chemistry, Micro Biology, Bio Technology, Zoology, Botany ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வயது வரம்பு : 19 முதல் 30 வயது வரை

மாத சம்பளம் : ரூ.15,435

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முக தேர்வு, மனிதவளத்துறை தேர்வு

ஓட்டுநருக்கான அடிப்படை தகுதி : 10-ம் தேர்ச்சி போதும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 24 – 35 வரை

உயரம் : 162.5 செ.மீ-க்கு குறையாமல் இருக்க வேண்டும்

அனுபவம் : வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் குறையாமல் இருக்க வேண்டும். பேட்ஜ் பெற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ. 15,235

தேர்வு முறை : எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், சாலை விதிகளுக்கான தேர்வு மற்றும் கண் பார்வை திறன் தேர்வு ஆகியவை மூலம் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

ரூ. 62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. முழு விவரம் இதோ..

இதனிடையே சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கான வேலைவாய்ப்பு நேர்காணல் வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரியிலும், வரும் 5-ம் தேதி பூந்தமல்லி ஆரம்ப சுகாதார மையத்திலும் நடைபெற உள்ளது. 

click me!