ரூ. 62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. முழு விவரம் இதோ..

By Ramya s  |  First Published Nov 1, 2023, 12:43 PM IST

ராமநாதபுரத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக அலகுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர், ஓட்டுநர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 6-ம் தேதிக்குள் இந்த பணியிடங்களுக்க்கு விண்ணபிக்கலாம். இதன் மூலம் 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காலியிட விவரம்:

Tap to resize

Latest Videos

undefined

அலுவலக உதவியாளர் : 07 

ஜீப் டிரைவர் : 06

பதிவு எழுத்தர் : 01

இரவு காவலாளி : 04

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8/10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜீப் டிரைவர் 8வது தேர்ச்சியுடன் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் இருக்க வேண்டும். பதிவு எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலாளி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

பொது / OC: 18 - 32 வயது

BC / MBC / DNC: 18 - 34 வயது

SC / SC(A) / ST: 18 - 37 வயது

சம்பள விவரம் :

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அறிவிப்பு 2023ன் படி மாத சம்பளம் கிடைக்கும்.

அலுவலக உதவியாளர் : மாதம் ரூ.15,700 - 50000/-

ஜீப் டிரைவர் : மாதம் ரூ.19,500 - 62,000/-

பதிவு எழுத்தர் : மாதம் ரூ.15,900 - 50,400/-

இரவு காவலாளி : மாதம் ரூ.15,700 - 50,000/-

விண்ணப்ப கட்டணம் : இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்த விண்ணப்ப கட்டணம் இல்லை.

இன்ஜினியரிங் படித்தவரா நீங்கள்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்கண்ட முகவரிக்கு வரும் 6-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் வளர்ச்சி பிரிவு, முதல் தளம், ராமநாதபுரம் மாவட்டம் – 623 504

விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.11.2023

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு விண்ணப்பம்
 

click me!