ரூ.62,000 வரை சம்பளம்.. 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழக வருவாய் துறையில் வேலை.. விவரம் உள்ளே..

By Ramya s  |  First Published Nov 6, 2023, 10:14 AM IST

நீலகிரி வருவாய் துறையில் காலியாக உள்ள 3 ஓட்டுநர் பணிகள் நிரப்பப்பட உள்ளன.


நீலகிரி வருவாய்த் துறையில் புதிய ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் மு. அருணா ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி நீலகிரி வருவாய் துறையில் காலியாக உள்ள 3 ஓட்டுநர் பணிகள் நிரப்பப்பட உள்ளன.

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை 05.11.2023 முதல் தொடங்கி உள்ளது. வரும் 30.11.230-க்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கல்வித்தகுதி : ஓட்டுநர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும் HMV/LMV ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 34 வயது.

சம்பளம் : மாத ஊதியம் ரூ.19,500/- முதல் ரூ.62,000/- வரை இருக்கும்.

முக்கிய விவரங்கள்

தொடக்க தேதி : 05-11-2023
கடைசி தேதி :  30-11-2023
வேலை இடம் : நீலகிரி
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் பயன்முறையில் அனுப்பப்பட வேண்டும்.

ரூ. 62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. முழு விவரம் இதோ..

விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் வசூலிக்கப்படாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊட்டி, நீலகிரி-643001.

விண்ணப்பதாரர்கள் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். தாமதமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

தேர்வு முறை : விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். நேர்முக தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரப்பூர்வ் வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

click me!