இந்திய ரயில்வேயில் காலியாக 9000 டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்திய ரயில்வேயில் காலியாக 9000 டெக்னீசியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்ட நபர்கள் இந்த காலியிடங்களுக்கான தகுதிகள், மற்றும் முக்கிய வழிகாட்டுதல்களை இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த பணியிடங்களுக்கு வரும் 09.0.2024 முதல் 04.04.2024 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரேடு 1 டெக்னீசியன், கிரேடு 2 டெக்னீசியன் ஆகிய பணிகளுக்கு காலியாக 9,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாகரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
undefined
காலியிடங்கள் விவரம் :
டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்) : 1,100 காலியிடங்கள்
டெக்னீசியன் கிரேடு 3 : 7,900 காலிடங்கள்
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை : 9000
கல்வித் தகுதி:
குறிப்பிட்ட டெக்னீஷியன் பதவியைப் பொறுத்து குறைந்தபட்சத் தகுதி மாறுபடும். எனினும் ஐடிஐ சான்றிதழுடன் மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு) முதல் டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்..
வயது எல்லை:
டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் - 18 முதல் 36 ஆண்டுகள்
டெக்னீசியன் தரம் 3 - 18 முதல் 33 ஆண்டுகள்
சம்பளம் :
டெக்னீசியன் கிரேடு 1 : ரூ.29,200
டெக்னீசியன் கிரேடு 3 : ரூ.19,900
விண்ணப்பக்கட்டணம்
பொதுப்பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் ரூ.250 செலுத்த வேண்டும்.
திருச்சியில் வேலை! தேசிய தகவல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியாளர் பணிக்கு அப்ளை பண்ணுங்க!
RRB 2024 டெக்னீஷியன் காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது