கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பிஇ., பி.டெக் அல்லது எம்.எஸ்சி படிப்பை முடித்திருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எம்சிஏ படித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
திருச்சியில் உள்ள தேசிய தகவல் தொழில்நுட்ப கல்லூரியில் (NIT) காலியாக உள்ள பொறியாளர் பயிற்சிப் பணிக்கான (Engineer Trainee) வேலைவாய்ப்பு அளிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
என்.ஐ.டி. திருச்சியில் எஞ்சினியர் டிரெய்னி (Engineer Trainee) பணிக்கு 7 காலி இடங்கள் உள்ளன. இந்தப் பயிற்சிப் பணிக்கு மாதம் ரூ.37 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது.
undefined
கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பிஇ., பி.டெக் அல்லது எம்.எஸ்சி படிப்பை முடித்திருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எம்சிஏ படித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
TNPSC : 245 காலியிடங்கள்.. சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி…
நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை உள்ளது. இந்தப் பயிற்சிப் பணிக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு பற்றிய தகவல் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின்போது தங்களுடைய அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த வேலைவாய்ப்புக்கு www.nitt.edu என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, முழுமையாகப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.2.2024