TNPSC : 245 காலியிடங்கள்.. சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி…

By Raghupati RFirst Published Feb 10, 2024, 10:14 PM IST
Highlights

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்து தேர்வை (மெயின் தேர்வு) கடந்தாண்டு நவம்பர் 4, 5ம் தேதி நடத்தியது. 

இத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அனுமதிக்கப்பட்டனர். நேர்முகத் தேர்வு கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை நடைபெற்றது. 

சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. நேர்முகத் தேர்வுகள் இன்றுடன் முடிந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளது டிஎன்பிஎஸ்சி என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

click me!