8ம் வகுப்பு படித்தால் போதும்.. சுகாதாரத்துறையில் அருமையான வேலைவாய்ப்பு.. முழு விபரம் இதோ..!

By vinoth kumar  |  First Published Feb 8, 2024, 11:58 AM IST

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  பல் மருத்துவ இருக்கை உதவியாளர், கணினி இயக்குபவர், கணினி தரவு நுழைவு ஆபரேட்டர் உள்ளிட்ட 49 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 49 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  பல் மருத்துவ இருக்கை உதவியாளர், கணினி இயக்குபவர், கணினி தரவு நுழைவு ஆபரேட்டர் உள்ளிட்ட 49 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

1. பல் மருத்துவ இருக்கை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 

10

கல்வித் தகுதி : 

டிப்ளமோ நர்சிங் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 

35 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ. 12,480

2. கணினி இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 

1

கல்வித் தகுதி : 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி அறிவியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயது தகுதி : 

35 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

மாத சம்பளம் :

 ரூ. 17,430

3. கணினி தரவு நுழைவு ஆபரேட்டர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 

1

கல்வித் தகுதி : 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி அறிவியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 

35 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

சம்பளம் : 

ரூ. 17,430

4. துப்புரவு மற்றும் தூய்மைப் பணி

காலியிடங்களின் எண்ணிக்கை : 

10

கல்வித் தகுதி : 

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

35 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

சம்பளம் : 

ரூ. 12,480

5. உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 

18

கல்வித் தகுதி :

 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 

35 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

சம்பளம் : 

ரூ. 12,480

6. பாதுகாப்பு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 

5

கல்வித் தகுதி :

 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

 35 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

சம்பளம் : 

ரூ. 14,430

7. துறைச் செயலாளர்கள்

காலியிடங்களின் எண்ணிக்கை : 

4

கல்வித் தகுதி : 

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணினி அறிவியல் மற்றும் புள்ளியியலில் பட்டம் படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 

35 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும்.

சம்பளம் : 

ரூ. 14,430

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2024/02/2024020624.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.

முகவரி :

நியமனக் குழு, அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முள்ளூர், புதுக்கோட்டை – 622004.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

22.02.2024

click me!