விமான சேவையில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு.! இளைஞர்களுக்கான புதிய வாய்ப்பு -சென்னையில் தொடங்கியது பயிற்சி மையம்

By Ajmal KhanFirst Published Feb 6, 2024, 10:35 PM IST
Highlights

விமான போக்குவரத்து சேவை பணிகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், விமான சேவையில் பிரபலமான குளோபல் ஃப்ளைட் ஹேண்ட்லிங் சர்வீசஸ் நிறுவனம்  சென்னையில் மிகப்பெரிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது. 
 

விமான சேவையில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு

நவீன யுகத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களும், தொழில் வளர்ச்சியும் வேகமாக வளர்ந்து  வருகிறது. அந்த வகையில் விமான போக்குவரத்து தற்போதைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பும் பெருகி கிடக்கிறது. இதனை தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், சென்னையில் விமான நிலையம்  அருகே,  8000 சதுர அடியில் குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் பயிற்சி மையம் பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.   பஹ்ரைன் நாட்டின் கல்ஃப் ஏவியேஷன் அகாடமியுடன் இணைந்து  அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. 

கேபின் க்ரூப் பயிற்சி

விமானப் போக்குவரத்துக் கல்வியில், விரிவான பயிற்சித் திட்டங்களை வழங்க, அதிநவீன வகுப்பறைகள், அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி வசதிகள் மற்றும் அதிநவீன கற்றல் அனுபவத்தை வழங்க  அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது இந்த பயிற்சி மையம்.  இந்நிறுவனத்தின், குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் விமானப் பள்ளி,  கேபின் க்ரூப் பயிற்சி, பல்வேறு விமான நிலைய நிர்வாகத் திட்டங்களில் உள்ள படிப்புகள் உட்பட விமானப் பயணத்தின் பல்வேறு அம்சங்களை  கற்றுத்தர உள்ளது. அதற்கேற்ற வகையில் மிகச்சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

200 விமான நிலையங்களில் பயிற்சி

குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷனின் நிர்வாக இயக்குநர் சரிதா கூறுகையில், இந்தப் பள்ளி சிறந்த மனித வள மேம்பாட்டுடன் செயல்படும் என்றும்,  தற்போது 700 விமானங்கள் மற்றும்  130 விமான நிலையங்களில்  செயல்படும் இந்த நிறுவனம் இன்னும் சில வருடங்களில் 2000 விமானங்களுடன் 200 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் செயல்பட உள்ளது என்றார்.  இது மிகப்பெரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்த உள்ளது என்றும்  தெரிவித்த அவர், தகுதியுடைய சிறந்த விமானத்துறை பணியாளர்களை உருவாக்குவது தங்கள் நோக்கம் என்று குறிப்பிட்டார். 

இதையும் படியுங்கள்

இந்திய விமானப்படையில் சேர அருமையான வாய்ப்பு.. அக்னிவீர் பணியில் விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு !

click me!