12-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை.. முழு விவரம் இதோ..

By Ramya s  |  First Published Feb 7, 2024, 3:33 PM IST

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஜிப்மரில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 
பணியிடம் : டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்

கல்வித்தகுதி :

Tap to resize

Latest Videos

undefined

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அரசு அல்லது அரசு சாரா அலுவலகங்களில் EDP பணி செய்த அனுபவம் இருக்க வேண்டும். 

இந்திய விமானப்படையில் சேர அருமையான வாய்ப்பு.. அக்னிவீர் பணியில் விண்ணப்பிப்பதற்கான தேதி நீட்டிப்பு !

வயது வரம்பு : 30 வயது பூர்த்தி அடைந்து 40 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். அரசின் விதிகளின் படி எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு இருக்கும்.

சம்பளம் : இந்த பணிக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2024

ஆன்லைனில் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கனா லிங்க் இதோ:  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdEAMQVrm5rTV2N_giLQkeQurp9b3wwIUeiB0YL_dyYuKsTXA/viewform
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு அல்லது நேர்முகத்தேர்வு குறித்த அறிவிப்பு https://www.jipmer.edu.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். 

ஜிப்மர் மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ இணையதளம் இதோ : https://www.jipmer.edu.in/

இந்த பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சென்னையில் மத்திய அரசு பணி.. 80,000 ரூபாய் வரை சம்பளம் - டிப்ளமோ முதல் MBBS படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்!

click me!