ஆவின் நிறுவனத்தில் 322 காலிப் பணியிடங்கள்.. இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும்.. தமிழக அரசு முடிவு.!

By vinoth kumarFirst Published Feb 8, 2023, 12:26 PM IST
Highlights

ஆவினில் காலியாக உள்ள பணியிங்களுக்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சேர்ந்து விதிகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக குழு அமைத்து பணி நியமன முறைகேடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். 

ஆவினில் மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 26 வகையான துறைகளில் உள்ள 322 காலிப் பணியிடங்கள் இனிமேல் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஆவினில் காலியாக உள்ள பணியிங்களுக்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சேர்ந்து விதிகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக குழு அமைத்து பணி நியமன முறைகேடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அதில், அதிமுக ஆட்சியில் விதிகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்டது உறுதியானது.

இதையும் படிங்க;- தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலை!. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க - முழு விபரம் இதோ !!

விதிமுறைகளை மீறி பணியில் சேர்ந்த மேலாளர்கள், துணைமேலாளர்கள் உள்ளிட்ட 236 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதுபோன்ற விதிமுறைகளை தவிர்க்கும் வகையில் இனி  டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 

அதன்படி, மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய ஆவின் நிறுவனத்தில் உள்ள 26 வகையான 322 காலிப் பணியிடங்களை இனி தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- மத்திய பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

click me!