இந்தியாவின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பினை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்
இளநிலை பொறியாளர் பதவிகளுக்கான பணியிடங்கள் குறித்தான அறிவிப்பு வருங்காலங்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர் தேர்வாணையத்தின் இணைய பக்கத்தை அவ்வப்போது பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
எல்லை சாலைகள் அமைப்பு (BRO), மத்திய நீர்வள ஆணையம் (CwC), ராணுவ பொறியியல் சேவை(MES) ஆகிய துறைகளில் உள்ள இளநிலை பொறியாளர் பதவிகளுக்கு, அந்தந்த பொறியியல் துறைகளில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இதர துறைகளில் உள்ள பதவிகளுக்கு தொடர்புடைய துறைகளில் டிப்ளமோ படிப்பு படிந்திருந்தாலே போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
மத்திய பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை ஆகிய பிரிவுகளில் விண்ணப்பிக்கும் நபர்கள், 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதர பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் வயது 30 க்கும் கீழ் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எஸ்.டி. எஸ். சி பிரிவினை சேர்ந்தவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிலிருந்து 5 ஆண்டு வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்ப்புகளை சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். அதைப் போல் நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:CUET தேர்வில் இணையும் நீட் JEE தேர்வுகள்; ஒரே நாடு, ஒரே தேர்வு - பதறும் மாணவர்கள்!!
சம்பள விவரம்:
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்வான தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் தேதி:
இந்த பதவிகளுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க:சூப்பர் அறிவிப்பு.. ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்.. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்.
விண்ணப்பிக்கும் முறை:
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமாக ssc.nic.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்து ஸ்கேன் செய்து ஆன்லைன் விண்ணப்பபடிவத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக புகைப்படங்கள், தொப்பி மற்றும் மூக்கு கண்ணாடி இல்லாமல் இருக்கவேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தாள் I மற்றும் தாள் II என்று எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் பெறூம் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எல்லை சாலைகள் அமைப்பு பிரிவில் உள்ள பதவிகளுக்கு மட்டும் எழுத்துத் தேர்வுடன் உடற்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டிகள், ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு முறை நடைபெறுகிறது
மேலும் படிக்க:மாதம் 55 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பு !
எஸ்எஸ்சி வெளியிட்ட அறிவிப்பு:
இளநிலை பொறியாளர் சிவில், இயந்திரவியல், மின்சாரவியல் மற்றும் அளவு மதிப்பீடு & ஒப்பந்தங்கள் தேர்வு, 2022 (JUNIOR ENGINEER (CIVIL, MECHANICAL, ELECTRICAL AND QUANTITY SURVEYING & CONTRACTS) EXAMINATION, 2022)