நல்ல சம்பளத்தில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் அருமையான வேலைவாய்ப்பு..விண்ணப்ப கட்டணம் இல்லை!

By Raghupati R  |  First Published Aug 13, 2022, 9:59 PM IST

தமிழகத்தை சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு சூப்பர் செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.


நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC), இந்தியா முழுவதும் காலியாக உள்ள 955 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

காலி பணியிடங்கள் : 955

Tap to resize

Latest Videos

கடைசி தேதி : 24.08.2022 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

விண்ணப்ப கட்டணம் : இல்லை 

மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.nlcindia.com என்ற வலைப்பக்கத்தில் மேலும் தெரிந்து கொள்ளலாம்.பதவிகளை பொறுத்து கல்வி தகுதி மாறுகிறது. விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம் மாதம் ரூ.10,019 முதல் 15,028/- வரை பதவிக்கேற்ப மாறுபடுகிறது. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பட்டியல் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொண்டு சரியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

click me!