அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் வேலை.. 10 ஆம் படித்திருந்தால் போதும்..செப்.23 ல் நேர்காணல்..

By Thanalakshmi V  |  First Published Sep 16, 2022, 1:38 PM IST

அஞ்சல் ஆயுள் காப்பீடு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
 


பணியின் பெயர்: காப்பீடு விற்பனை முகவர்

வயது வரம்பு: 

Tap to resize

Latest Videos

விண்ணப்பதாரர்கள் வயது 18 - 60க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / உள்ளூரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு முன்னூரிமை வழங்கபடும்.

மேலும் படிக்க:காலை சிற்றுண்டி திட்டம்.. நெல்லை மாநகரில் 22 பள்ளிகளில் ஆட்சியர் தொடங்கி வைப்பு..

விண்ணப்பிக்கும் முறை:  

ராணிபேட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் சுய விவரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்துடன் கலந்துக்கொள்ளலாம். வயது / கல்வி ஆதாரத்திற்கான மூலச் சான்றிதழ், காப்பீட்டுத்துறையில் அனுபவத்திற்கான சான்றிதழ் ஏதாவது இருந்தால், அதன் நகல் ஆகியவற்றுடன் நேர்காணலுக்கு வரவேண்டும்

முக்கிய குறிப்பு: 

சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீடு ஆலோசகர்கள் / முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இதற்கு  விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் துறையிலிருந்து ஊதியம் வழங்கப்படமாட்டாது என்றும் முகவர்களின் செயல்பாடு அடிப்படையில் ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஸ்டாலின் தொகுதியில் மாஸ் காட்டும் பாஜக..! மோடி பிறந்தநாளில் 720 கிலோ மீன், தங்க மோதிரம்..! எல்.முருகன் அதிரடி

 

click me!