இங்கிலாந்து நாட்டில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் செவிலியர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணிக்கு Diploma (Nursing) அல்லது B.Sc (Nursing) degree பயின்ற குறைந்தபட்ச ஒரு வருட அனுபவமும் OET/IELTS தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் பெருமளவில் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு மாத சம்பளம் ரூ.2,00,000/- முதல் 2,50,000/- வரை வழங்கப்படும்.
எனவே தகுதியுள்ளவர்களின் விவரத்தை வெளிநாட்டு வேலை வழங்குவோருக்குத் தெரிவிக்கும் பொருட்டு, OET (Oocupational English Test) பயிற்சியில் Grade B மற்றும் அதற்குமேல் தேர்ச்சிப்பெற்றவர்களும், IELTS (Interniational English Language Testing. Systern) பயிற்சியில் Band 7.0 மற்றும் அதற்கு மேல் தேர்ச்சிப்பெற்றவர்களும் omcmanpower.com/registration.php என்ற இணைய பக்கத்தில் பதிவுசெய்யும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:EPFO வேலைவாய்ப்பு 2022 .. 40 காலி பணியிடங்கள்.. ரூ.34,000 சம்பளத்தில் வேலை.. விவரம் உள்ளே..
வெளிநாட்டில் பணிப்புரியும் பொருட்டு, OET இலவசப் பயிற்சி பயில விரும்பும் செவிலிய மாணவர்கள்/மாணவிகள் மற்றும் வேலை அனுபவமுள்ள செவிலியர்களுக்கு அரசின் மூலமாக முன்வரிசையின் அடிப்படையில் இலவசப் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கொடுக்கப்பட்டுள்ள வலைதள இணைப்பில் தவறாமல் பதிவுசெய்து பயனடையும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், இந்நிறுவனத்தில் பதிவு செய்வது நான்கு வருடங்களுக்கு செல்லத்தக்கதாகும். எனவே இந்நிறுவனத்தில் செல்லத்தக்க பதிவில் உள்ள பதிவுதாரர்கள் மட்டும் தற்போது IELTS அல்லது OET-ல் தேச்சிப்பெற்றிருப்பின் தங்களுடைய பதிவு எண், பதிவிட்ட தேதி, சுய விண்ணப்பப்படிவம் மற்றும் ELTS/OET தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களையும் omcluk2020@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:இந்திய விண்வெளி துறையில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிப்பது எப்படி..? விவரம் இதோ
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் என்பதால் நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ எவரும் இல்லை. ஆகவே, விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.