இந்திய விண்வெளி துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆர்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்
காலி பணியிடங்கள்: 17
பணியின் பெயர்: உதவியாளர், தனி உதவியாளர்
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியின் விவரம்:
உதவியாளர் பணி- 11
தனி உதவியாளர் - 6
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அக்.1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று https://www.prl.res.in/prl-eng/ விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆட்சேபனை சான்றிதழ் (NOC certificate), சாதி சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள் சான்றிதழ் உள்ளிட்டவைகளை இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆள்சேர்ப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:EPFO வேலைவாய்ப்பு 2022 .. 40 காலி பணியிடங்கள்.. ரூ.34,000 சம்பளத்தில் வேலை.. விவரம் உள்ளே..
அனுப்ப வேண்டிய முகவரி :
RECRUITMENT SECTION
ROOM NO. 003
PHYSICAL RESEARCH LABORATORY
NAVRANGPURA
AHMEDABAD-380 009
கல்வித்தகுதி:
உதவியாளர் பணி - மேலாண்மை, அறிவியல், வணிகம் உள்ளிட்ட பாடநெறிகளில் ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தனி உதவியாளர் பணி - மேலாண்மை, அறிவியல், வணிகம் , கணினி அறிவியல் உள்ளிட்ட பாட நெறிகளில் ஏதாவது ஒன்றில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகள் தட்டச்சு செய்யத் தெரிய வேண்டும். கணினி அறிவு இருந்தால் நல்லது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது 26க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வயது வரம்பில் இருந்து 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூ25,500 – ரூ.81,100 வழங்கப்படும்.
தேர்வு செய்யபடும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் திறனறிவு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:ஹிந்துஸ்தான் ஷிப்யார்டில் சூப்பர் வேலை.. எழுத்து தேர்வு , நேர்காணல் கிடையாது.. எப்படி விண்ணப்பிப்பது..? விவரம்